அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த நாள் விழா... மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவிடம்

x

அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த நாள் விழா... மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவிடம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 91ஆவது பிறந்தநாளை ஒட்டி, பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில், குடும்பத்தினர், ராமேஸ்வரம் ஜமாத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

2015ஆம் ஆண்டு ஜூலை 27இல் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் சார்பில், ராமேஸ்வரம் பேக்கரும்பில் நினைவிடம் கட்டப்பட்டது.

அவரது பிறந்த நாளை ஒட்டி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவிடத்தில், அப்துல் கலாமின் குடும்பத்தினர், ராமேஸ்வரம் ஜமாத்தினர், நடிகர் தாமு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்