தேர்தல் ஆணையரின் அடையாள அட்டை மாயம்..!பரபரப்பில் தேர்தல் ஆணையம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவின் அடையாள அட்டை காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்க, டெல்லிக்கு தபாலில் அனுப்புவதற்காக தனது உதவியாளர் சரவணன் என்பவரிடம் சாகு கொடுத்துள்ளார். தபால் நிலையத்தில் அடையாள அட்டை காணாமல்போனது தெரியவந்த நிலையில், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com