தன்னை கடித்த கட்டு விரியன் பாம்புடன் சிகிச்சைக்கு சென்ற இளைஞர் ! - மருத்துவமனையில் பரபரப்பு

x

தன்னை கடித்த கட்டு விரியன் பாம்புடன் சிகிச்சைக்கு சென்ற இளைஞர் ! - மருத்துவமனையில் பரபரப்பு.

கள்ளக்குறிச்சி அருகே தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி அருகே

வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், தனது அண்ணனுக்கு சொந்தமாக கரும்பு தோட்டத்தில், கரும்பு வெட்டும் பணியில்

ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கட்டு விரியன் பாம்பு, எதிர்பாராத விதமாக விக்னேஷை மூன்று இடங்களில் கடித்தது. இதையடுத்து

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது தன்னை கடித்த பாம்பையும்

மருத்துவமனைக்கு விக்னேஷ் எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்