ஒருவரை காலில் மிதித்து கொன்று சாலையோரம் வீசிய காட்டு யானை - அதிர்ச்சி சம்பவம்

x

தென்காசி மாவட்டம் தமிழக -கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அச்சன்கோவில் பகுதியில் இருந்து, புனலூருக்கு செல்லும் சாலையில் இருபுறங்களிலும் வனப்பகுதிகள் நிறைந்துள்ளதால், இந்த வழித்தடத்தில் அவ்வப்போது வனவிலங்குகள் வந்து சாலையில் நின்று அந்த வழியாக வரும் வாகனங்களை மறிப்பது வழக்கம்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த இரண்டு பேரை யானை ஒன்று தாக்கிய சூழலில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த வழியாக செல்பவர்கள் கவனமாக செல்ல வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று அச்சன்கோவிலில் இருந்து புனலூர் நோக்கி செல்லும் சாலையில் பட்டபகலில் ஒற்றை காட்டு யானை ஒன்று அவ்வழியாக வரும் வாகனங்களை மறித்துள்ளது.

இந்த சூழலில், அந்த வழியாக சென்ற ஒரு லாரியை ஒற்றைக் காட்டு யானை மறித்துள்ளது. உடனே வாகனத்தை நிறுத்திய லாரி டிரைவர் சத்தம் போட்டு யானையை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் யானை அங்கிருந்து 15 நிமிடங்களுக்கு மேலாக சொல்லாமல் சாலையில் வாகனத்தை வழிமறித்து நின்றுள்ளது.

தொடர்ந்து, பின்னால் வந்த வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஹாரன் சத்தம் எழுப்பி உடன் அங்கிருந்து அந்த யானை ஓரமாக உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. இதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் வீடியோவாக பதிவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்