திடீரென உயர்ந்த காவிரி ஆற்றின் நீர்வரத்து | dharmapuri

x

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஒகேனக்கல் பீலிக்குண்டு பகுதிக்கு நீரின் வரத்து திடீரென உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், தற்போது 5 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், கர்நாடக அணையில் இருந்து சுமார் 3 ஆயிரத்து100 கன அடி நீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்