வயலில் தோன்றிய திடீர் அம்மன்.. பக்திப் பரவசத்துடன் தரிசித்த மக்கள் | Ramanathapuram
சேமன் வயலைச் சேர்ந்த விவசாயி அருள் ஆனந்த் மற்றும் அவரது மனைவி ஜெயசீலி ஆகியோர் டிராக்டர் மூலம் வயலை உழுது, களைகளை அகற்றியுள்ளனர்... அப்போது மண்ணுக்குள் புதைந்த நிலையில் அம்மன் சிலை ஒன்று தென்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினரும் காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டனர்... அம்மன் சிலை தோன்றியதாக பரவிய தகவலால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஏராளமானோர் குவிந்து பக்திப் பரவசத்துடன் அம்மன் சிலையை தரிசித்து சென்றனர்... சிலையைக் கைப்பற்றிய வருவாய் துறையினர் பாதுகாப்பாக தாலுகா அலுவலகத்தில் வைத்துள்ளனர். இது கிபி.12 மற்றும் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த சக்தி சிற்பம் என்றும், சிலையை ஆய்வு செய்த பிறகு தான் ஐம்பொன்னால் ஆனதா?அல்லது வேறு ஏதேனும் உலோகத்தால் ஆனதா? என தெரியவரும் என்றும் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்...
