திடீரென பச்சை நிறத்தில் மாறிய ஆறு - பீதியில் திண்டுக்கல் மக்கள்

x

திடீரென பச்சை நிறத்தில் மாறிய ஆறு - பீதியில் திண்டுக்கல் மக்கள்

திடீரென பச்சை நிறத்தில் மாறிய ஆறு - பீதியில் திண்டுக்கல் மக்கள் | Vedasandur

வேடசந்தூர் அருகே குடகனாற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதால் தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. தற்போது மாவட்டத்தில் பெய்த மழையால், குடகனாறில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. இந்நிலையில், லட்சுமணம்பட்டி தடுப்பணைக்கு வரும் தண்ணீர் கடந்த 2 நாட்களாக கரும்பச்சையாக உள்ளது. அதிகமாக நுரை பொங்கி, தண்ணீரில் துர்நாற்றம் வீசுகிறது. மழை நேரத்தில் தோல் பதப்படுத்தும் நிறுவனங்கள், தனியார் நூற்பாலைகளின் ரசாயன கழிவுநீரை அப்படியே குடகனாறில் கலப்பதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்