திருப்பூரில் பெண்களுக்கு பானங்கள் இலவசம் என்று அறிவித்த தனியார் ஓட்டலின் இரவு விருந்திற்கு மேயர் அளித்த புகாரின் பேரில் தடை

x

திருப்பூரில் பெண்களுக்கு பானங்கள் இலவசம் என்று அறிவித்த தனியார் ஓட்டலின் இரவு விருந்திற்கு மேயர் அளித்த புகாரின் பேரில் தடை விதிக்கப்பட்டுள்ளது...

சகல வசதிகளுடன் பாரப்பாளையத்தில் தனியார் ஓட்டல் அமைந்துள்ளது... இந்நிலையில், இந்த ஓட்டல் சார்பில் விடுவிக்கப்பட்ட விளம்பரத்தில் டிஜே நைட் பார்ட்டியில் தம்பதியர், பெண்களுக்கு அனுமதி இலவசம் எனவும், இரவு 7 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில் பெண்களுக்கு மட்டும் பானங்கள் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது...

பானங்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், வெளியே அந்த தகவல் "மதுபானங்கள்" என்று பரவியது... இது பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.

அதிலும் இந்த ஹோட்டல் திறப்பு விழாவில் திருப்பூர் மேயரும், திமுகவினரும் கலந்து கொண்டது குறித்தும் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் டிஜே பார்ட்டி நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என புகார் மனு அளித்திருந்தார்.

அதன்படி இரவு விருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து, டிஜே பார்ட்டி என எந்த ஒரு நிகழ்ச்சியையும் தாங்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றும், வேறு ஓட்டல் விளம்பரத்தில் தவறுதலாக தங்கள் பெயர் பயன்படுத்தப் பட்டுள்ளதகாவும் கூறி வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்