விபத்தில் மரணித்த நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போலீஸ்.. உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை

x

விபத்தில் மரணித்த நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போலீஸ்.. உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த நிறைமாத கர்ப்பிணியான உஷா,

அம்மாண்டிவிளை அரசு மேல்நிலை பள்ளியின் முன்பு தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்தபோது, அதிவேகமாக வந்த மற்றொரு

இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி

உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அபிஷேக் பெக்கட் என்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே

உயிரிழந்த நிஷாவின் இறுதிசடங்கின்போது அவருக்கு, 21 குண்டுகள் முழங்க மாவட்ட எஸ்.பி ஹரிகிரண்பிரசாத் தலைமையில் காவல்துறை

மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்