நடுவழியிலேயே வலியால் துடிதுடித்த வடமாநில கர்ப்பிணி... தாயாக மாறிய ஆண் செவிலியர்

ஆம்புலன்ஸில் அவதியுற்ற பெண்ணுக்கு குழந்தைபேறு சிகிச்சையளித்து தாய்-சேயை காப்பாற்றிய ஆண் செவிலியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது...
x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த உட்பிரையர் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் ஜார்க்கண்ட் தம்பதி வேலை பார்த்து வருகின்றனர். அதில், சோனம்ந்தகுமாரி என்ற நிறைமாத கர்ப்பிணி வயிற்று வலியால் துடித்துள்ளார். அவரை கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், மகப்பேறு மருத்துவர் இல்லாததால், 108 ஆம்புலன்ஸ் மூலம் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊட்டிக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், 10 கிலோ மீட்டர் தூரத்திலேயே பிரசவ வலியால் துடிதுடித்த பெண்ணுக்கு, ஆண் செவிலியர் குழந்தைபேறு பார்த்துள்ளார். தாயுமானவனாக சிகிச்சை அளித்து காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தாய், சேய் இருவரையும் மீண்டும் கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில், துரிதமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பசுவராஜ், செவிலியர் ரதீஷ் இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 24 நேரமுறையில், கணவன், மனைவியான இரு மருத்துவர்கள் மட்டுமே கூடலூரில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்