போக்குவரத்துக்கு இடையூறாக வந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்.. காவலர் செய்த நெகிழ்ச்சி செயல்

x

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றத் திரிந்த முதியவரை, உண்ண உணவு கொடுத்து, காவல் கரத்தில் ஒப்படைத்த போக்குவரத்து போலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை வேப்பேரியில், 65 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர், கடந்த ஒரு வாரமாக, சாலையில் இருக்கக்கூடிய இணையதள ஒயர்களை அறுத்துக் கொண்டும், சாலையின் குறுக்கே சென்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியும் வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில், வேப்பேரி போக்குவரத்து போலீசார், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த முதியவரை பத்திரமாக மீட்டு, உணவு வழங்கினர். காவல் கரங்களிடம் அளித்த தகவலின் பேரில் அங்கிருந்து முதியவர் வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனிடையே, முதியவரை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. முதியவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அரசு ஊழியராக பணியாற்றி வந்ததும், தனது மகளின் இறப்பால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. போலீசாரின் இந்த செயலை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்