ஒரே வீட்டில் அடுத்தடுத்து கொள்ளை முயற்சி... ஆயுதங்களோடு வலம் வரும் முகமூடி கும்பல்

x

இரவு நேரத்தில் கேட்டை சாத்தி விட்டு வீட்டிற்குள் சென்ற முதியவரை, ஒரு முகமூடி கும்பல் வீடு புகுந்து வெட்டிய காட்சிகள் தான் இது.

தாக்கப்பட்ட முதியவர் சத்தம் போடவே அந்த கும்பல் அங்கிருந்து தலை தெரிக்க ஓடி தப்பித்திருக்கிறது...

இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களிலேயே , காரில் வந்த 4 நான்கு பேர் கொண்ட கும்பல் அதே வீட்டுக்குள் வந்து கொள்ளையடிக்க முயற்சித்திருக்கிறது..

சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு அரங்கேறிய இந்த பயங்கர சம்பவத்தில் இருந்து இரண்டு முறை உயிர் தப்பிய ஒரு குடும்பம், அடுத்த ஒவ்வரு இரவையும் அச்சத்தில் கழித்துக் கொண்டிருக்கிறது.

காளையார்கோவில் அருகே உள்ள கே.கே.நகர் பகுதியில் இருக்கும் இந்த வீட்டில் தான் , இரண்டு முறை அரங்கேறி இருக்கிறது இந்த கொள்ளை சம்பவம்.

சம்பவம் நடந்த இந்த வீடு செல்வராஜ் என்பவருக்கு சொந்தமானது. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தமகள் திருமணமாகி வெளினாட்டிலும், இளைய மகள் வெளி ஊரிலும் கணவருடன் வாழ்ந்து வருகிறார்கள். இதனால் வயதான செல்வராஜும் அவரது மனைவியும் மட்டும் தான் இந்த வீட்டில் தனந்தனியாக வசித்து வந்திருக்கிறார்கள்.

இந்த பகுதியில் தூரம்தூரமாக வீடு அமைந்திருப்பதால் செல்வராஜ் தனது பாதுக்கப்புக்காக வீட்டைச் சுற்றி கண்கானிப்பு கேமராவை பொருத்தி வைத்திருக்கிறார்.ஆனால் இத்தனையாண்டுகளில் அந்த கேமராவுக்கு வேலை வராமல் தான் இருந்திருக்கிறது.

ஆனால் கடந்த மாதம் 25 ஆம் தேதி நடந்த ஒரு பகீர் சம்பம் செல்வராஜை மட்டுமல்லாது அந்த பகுதி மக்கள் மொத்த பேரையும் அச்சத்தில் ஆழ்த்திவிட்டது.

இரவு 7 மணியளவில் வீட்டுக் கேட்டை சாத்திவிட்டு உள்ளே சென்ற செல்வராஜை முகமூடி அணிந்த ஒரு கொள்ளை கும்பல் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் சிறைபிடித்திருக்கிறது. அவர்களது பிடியில் இருந்த செல்வராஜ் விடுபட முடியாமல் மல்லுக்கட்ட, அந்த கும்பல் வீட்டுகதவை திறக்கச் சொல்லி மிரட்டி இருக்கிறது, ஆனால் அதற்குள் அங்குவந்த அவரது மனைவி அச்சத்தில் கூச்சல் போட , அந்த கும்பல் செல்வராஜை வெட்டி விட்டு தப்பி ஓடி இருக்கிறது.

வீட்டில் மாட்டப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்து பார்த்திருக்கிறார்கள். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வெகு நேரமக செல்வராஜின் வீட்டை நோட்டமிட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது.

உடனே இது தொடர்பான சிசிடிவி காட்சிகாளோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் செல்வராஜ்.

விசாரனையில் இறங்கிய போலீசார் , அந்த கார் போன திசையில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த காரில் நம்பர் பிளேட்டே இல்லாததால் , போலீசாரால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து கடந்த சில நாட்களாக விசாரணை ஒரு பக்கம் நீண்டு கொண்டே இருக்க , செல்வராஜ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருக்கிறார்.

தனியாக நான்கு கொள்ளையர்களிடம் சிக்கிய அதிற்சியில் இருந்து வெளிவருவதற்குள்ளாகவே, கடந்த 13 ஆம் தேதி அந்த கும்பல் மீண்டும் செல்வராஜ் வீட்டுக்கு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறது.

இந்த முறை உசாராக சிசிடியை துண்டித்த அந்த கும்பல், கையில் ஆயுதங்களோடு கதவை திறக்கச் சொல்லி செல்வராஜையும் அவரது மனைவியையும் மிரட்டி இருக்கிறது.

அவர்கள் சத்தம் போட்டத்தையடுத்து அந்த கும்பல் , இரண்டவது அட்டமிட்டிலும் , தோல்வியடைந்து அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறது.

இந்த குடியிருப்பு பகுதியில் வீடுகள் ஆங்காங்கே இருப்பதை சாதகமாக்கிக் கொள்ள நினைத்த ஏதோ ஒரு கும்பல் தான் இந்த சம்பவத்தை செய்வதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆதாரங்களோடு புகார் கொடுத்த பிறகும் போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுக்காதது தங்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியிருப்பதாக செல்வராஜின் உறவினர்கள் வேதனையோடு கூறுகிறார்கள்.

காவல்துறை உரிய முனைப்புக் காட்டி , குற்றவாளிகளை கண்டுபிடித்தால் மட்டுமே , முகமூடி கும்பலின் சுயவிவரங்களை கண்டுபிடிக்க முடியும்.


Next Story

மேலும் செய்திகள்