சமரசம் பேச சென்ற இடத்தில் கள்ளக்காதலியை சம்பவம் செய்த காதலன்.. சென்னையில் அரங்கேறிய பயங்கரம்

கள்ளக்காதலிக்கு நிலம் வாங்கி கொடுத்த விவகாரத்தில் ஏற்பட்ட கத்தி குத்தில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...
x

சமரசம் பேச சென்ற இடத்தில் கள்ளக்காதலியை சம்பவம் செய்த காதலன்.. சென்னையில் அரங்கேறிய பயங்கரம்

கள்ளக்காதலிக்கு நிலம் வாங்கி கொடுத்த விவகாரத்தில் ஏற்பட்ட கத்தி குத்தில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சாந்தி, இவர் பார்த்திபன் என்பவருடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், அப்போது, ஒரகடம் பகுதியில் 1200 சதுர அடி கொண்ட நிலத்தை பார்த்திபன் எழுதி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் பிரிந்த நிலையில் சாந்தி நிலத்திற்கு பதில் 6 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்காக விருகம்பாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் அலுவலகத்தில் இருவரும் சமரசம் பேச வந்த நிலையில் சாந்தி அவரது மகள் மற்றும் மருமகனுடன், பார்த்திபன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சாந்தியின் கழுத்தில் வெட்டியுள்ளார். மேலும் தடுக்க வந்த மருமகள் மற்றும் மருமகனையும் வெட்டியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் பார்த்திபனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.Next Story

மேலும் செய்திகள்