"வண்டி-ல கொஞ்சம், கேன்-ல கொஞ்சம்" - பங்க் ஊழியர்களின் வேற லெவல் மோசடி - வெளியான ஷாக் வீடியோ

பங்க் ஊழியர்களின் வேற லெவல் மோசடி
x

உடுமலை அருகே நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பெதம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்கின் ஊழியர்கள், வாடிக்கையாளர்களிடம் பேச்சுக்கொடுத்து, திசை திருப்பி, அருகில் உள்ள கேனில் பெட்ரோலை நிரப்பி மோசடி செய்து வந்துள்ளனர். இதனை சிலர், வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தந்தி தொலைகாட்சியிலும் இதுகுறித்த செய்தி வெளியாகியிருந்தது. பங்க் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த, மோசடியில் ஈடுபட்ட ஊழியர்களான சிலம்பரசன் மற்றும் சாந்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்