அரசுப் பேருந்தை வழிமறித்து கொள்ளை - சிவகங்கையில் அதிர்ச்சி

x

சிவகங்கையில் அரசு பேருந்தை வழி மறித்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை பேருந்து பணிமனையில் இருந்து திருப்புவணம் பகுதிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில், நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மட்டும் பயணித்துள்ளனர். அப்போது கரும்பாவூர் விளக்கு அருகே பேருந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பேருந்தை வழிமறித்து நடத்துநரை கத்தியைக் காட்டி மிரட்டி பணப்பையை பறித்துச் சென்றனர். இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், வீரவலசை பகுதியில் கொள்ளையர்கள் வீசிச் சென்ற பயணச்சீட்டுகள் மற்றும் சில்லறைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்