விபரீதத்தில் முடிந்த சீட்டு விளையாட்டு...கூலித் தொழிலாளிக்கு நடந்த கொடூரம்

x

விபரீதத்தில் முடிந்த சீட்டு விளையாட்டு...கூலித் தொழிலாளிக்கு நடந்த கொடூரம்

பவானி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளில், கன்னியாகுமரியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர், ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் அனைவரும், கவுண்டம்பாளையத்தில் உள்ள காலி இடத்தில், தற்காலிக கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், ஒப்பந்த ஊழியர்களான சுஜின்

மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும், சீட்டு விளையாடியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ்,

கடப்பாரையைக் கொண்டு சுஜினின் தலை மற்றும் முகத்தில் கொடூரமாக தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார்,

உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தலைமறைவான ரமேஷை, போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்