ஆஸ்கர் விருது வென்ற இயக்குனருக்கு பறந்த நோட்டீஸ்

x

ஆஸ்கர் விருது வென்ற இயக்குனருக்கு பறந்த நோட்டீஸ்

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கார்த்திகி ஏமாற்றியதாக கூறப்படும் நிலையில், யானை பராமரிப்பு தம்பதி பொம்மன்-பெள்ளி சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில், யானை பராமரிப்பு தம்பதிகளான பொம்மன், பெள்ளி மற்றும் ரகு, பொம்மி ஆகிய இரு யானைகளை வைத்து, The Elephant whisperes என்ற ஆவணப்படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கினார். இது, சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது வென்றது. இதற்காக பொம்மன்-பெள்ளியை பல்வேறு தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், பொம்மன்-பெள்ளி தம்பதிக்கு கார், வீடு மற்றும் வங்கிக் கணக்கில் ஒரு தொகை செலுத்தப்பட்டதாக இயக்குனர் கார்த்திகி கூறியதாக தகவல் வெளியானது. இதனை பொம்மன்-பெள்ளி மறுத்துள்ள நிலையில்,

அதுகுறித்து விளக்கம் கேட்டு சென்னையைச் சேர்ந்த பிரவீன்ராஜ் என்ற வழக்கறிஞர், இயக்குனர் கார்த்திகிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்