ரசாயன ஆலையில் பற்றிய தீ..திணறும் தீயணைப்பு துறையினர்.."இப்படியே போனால் அவ்வளவு தான்"

x

மணலில் உள்ள தின்னர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஆறு மணி நேரமாக போராடி தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்

சென்னை அடுத்த மணலி பொன்னேரி ஹை ரோடு வைகாடு பகுதியில் ஐசக் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தின்னர் மற்றும் ரசாயன குடோன் உள்ளது அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது கம்பெனியில் தங்கி இருந்த ஊழியர்கள் தீ எரிய தொடங்கியவுடன் கம்பெனியை விட்டு பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து அருகில் இருந்த காவல்துறை ரோந்து வாகனத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர் உடனடியாக காவல்துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மணலி திருவொற்றியூர் எண்ணூர் தண்டையார்பேட்டை மாதவரம் மீஞ்சூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து 20 தீயணைப்பு வாகனமும் மேலும் அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ராட்சத தீயணைப்பு வாகனமும் வரவழைத்து 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர் மேலும் மல மல வேன்று என்று எரிந்து கொண்டிருப்பதால் அதை கட்டுப்படுத்த தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது அப்பொழுது மெட்ரோ வாட்டர் லாரிகள் மூலம் தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் கருண் புகை சூழ்ந்து காணப்படுகிறது ராட்சத தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து வீரர்கள் 100 அடி உயரத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்த தற்பொழுது போராடி வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது தீ பற்றி அது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்