மனைவியுடன் சென்ற பிரபல ரவுடிஓட, ஓட விரட்டி வெட்டிய 2 பேர்சென்னையின் முக்கிய பகுதியில் பயங்கரம்

x

மனைவியுடன் சென்ற பிரபல ரவுடிஓட, ஓட விரட்டி வெட்டிய 2 பேர்சென்னையின் முக்கிய பகுதியில் பயங்கரம்

சென்னையில் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்ற பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஓலை சரவணன், அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர். கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து சமீபத்தில் வெளி

வந்துள்ளார். இந்நிலையில், தனது மனைவியுடன் காய்கறி மார்கெட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். போலீஸ் குடியிருப்பு நிறைந்த பாரதிதாசன் சாலை அருகே

செல்லும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஓலை சரவணனை மடக்கி அரிவாளால் வெட்டத் தொடங்கினர். சாலையில் ஓடியவரை துரத்திச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு,

கண் இமைக்கும் நேரத்தில் இருவரும் தப்பித்துச் சென்றனர். ஓலை சரவணனின் உடலை கைப்பற்றிய போலீசார், முன்பகையா, தொழில் போட்டியா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.Next Story

மேலும் செய்திகள்