வீட்டிலிருந்து கோவை தொழிலதிபரை குடும்பத்தோடு வெளியேற்றிய பிரபல வங்கி.. பரபரப்பு காட்சிகள்

x

கோவையில், கடன் தவணை கட்ட தவறிய தொழில் முனைவோரை, வங்கி அதிகாரிகள் குடும்பத்துடன் வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை சின்னவெடம்பட்டி அருகே மைக்ரோ தொழிற்சாலை நடத்தி வரும் கணேஷ் ஆனந்த் என்பவர், தனியார் வங்கி ஒன்றில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், மூன்று மாதங்களாக கடன் தவணை செலுத்தவில்லை எனவும் தெரிகிறது. இதனிடையே, கண்ணப்ப நகரில் உள்ள கணேஷ் ஆனந்தனின் வீட்டுக்குச் சென்ற வங்கி அதிகாரிகள், அவரை குடும்பத்துடன் வெளியேற்றி விட்டு, வீட்டை ஜப்தி செய்தனர். இந்நிலையில், வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்