பெண் பக்தரிடம் வழிபறியில் ஈடுபட்ட போலி சாமியார்... பிரம்பால் அடித்து துவைத்து போலீசில் ஒப்படைப்பு...

x

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாமியார்களின் கூட்டத்திற்கு நடுவே இருந்த ஒரு வயோதிகரை அங்கிருந்தவர்கள் பிரம்பால் அடித்து வெளுத்துக்கொண்டிருந்தனர

ஒட்டுமொத்த பக்தர்களையும் பாவத்துடன் திரும்பி பார்க்க வைத்த இந்த சம்பவத்தை கண்டு நமக்கே ஒருகணம் அய்யோ என தோன்றலாம்.

ஆனால் அடி வாங்கும் இந்த ஆசாமி செய்த வேலை அத்தனை கொடூரமானது.

பெண் பக்தர்களின் கழுத்தில் கத்தியை வைத்து வழிபறியில் ஈடுபட்டதன் பின்விளைவு தான் இந்த பிரம்படிகள்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்.... அக்னி தலமாக கருதப்படும் இங்கு அன்றாடம் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், மலையை சுத்தவும் வருவதுண்டு.

இரவு பகல் பாராது மக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் இந்த கிரிவலப்பாதையில் எண்ணற்ற சாமியார்களும் சாதுக்களும் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த அன்று ஆடி வெள்ளி என்பதால் ஆந்திரா மாநிலம் திருப்பதியை சேர்ந்த லாவண்யா என்ற பெண் தனது உறவினர்களுடன் திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறார்.

சுவாமி தரிசனம் செய்தவர்கள், இரவு 6 மணியளவில் கிரிவலத்தை துவங்கி உள்ளனர். பாதி வழியில் லாவண்யாவும் அவரது உறவுக்கார பெண்ணும்

இயற்கை உபாதை கழிப்பதற்காக சாலை ஓரமாக இருந்த காட்டுப்பகுதிக்குள் ஒதுங்கி இருக்கிறார். அப்போது தான் அவர்களை நெருங்கி இருக்கிறது ஒரு கோர உருவம்.

சாமியார் வேடமணிந்திருந்த ஒருவர் திடீரென லாவண்யாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைகளை பறிக்க முயற்சித்துள்ளார். இதனை தடுக்க வந்த உறவுக்கார பெண்ணை கத்தியால் தாக்கி மிரட்டி இருக்கிறார் அந்த ஆசாமி.

இதனை கண்டு அதிர்ந்து போன அந்த பெண்கள், உடனே கத்தி கூச்சலிட்டிருக்கிறார்கள். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அந்த ஆசாமியை சுற்றி வளைத்து பிரம்பால் அடித்து துவைத்திருக்கிறார்கள்.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த நபரை கைது செய்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது தான் அவரின் உண்மை முகம் அம்பலமாகி உள்ளது.

அப்பாவி முகத்துடன் அய்யோ பாவம் என அமர்ந்திருக்கும் இவர் திருக்கோவிலூரை சேர்ந்த பாபு. இவரை வழிபறி பாபு என்றால் சொன்னால் அனைவருக்கும் பரிச்சையம்.

திருக்கோவிலூர் சுற்று வட்டார பகுதிகளில், கொள்ளை, வழிபறி என பல சம்பவங்களை செய்து பேசமானவர். சீசன் காலங்களில் மட்டும், திருவண்ணாமலைக்கு சென்று சாமியார் வேடமிட்டு அடியார்களோடு அடியாராக ஐக்கியமாகி விடுவாராம்.

அங்கே இயற்கை உபாதை கழிக்க தனியாக ஒதுங்கும் பெண்களை பின் தொடர்ந்து சென்று, கத்தியை காட்டி வழிபறி செய்வது பாபுவின் தொழில் யுக்தி.

பார்ப்பதற்கு பாவமாக சுற்றி திரிவதால் இவரின் களவு வேலைகள் வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்துள்ளது.

விசாரனையின் முடிவில் வழிபறி பாபுவின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த பகுதியில் இது போன்ற சம்பங்கள் நடப்பது ஒன்றும் முதல் முறை அல்ல... சாமியார் போர்வையில் மறைந்திருக்கும் ஆசாமிகளால் பலரும் பாதிக்கபடுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் இதுபோன்ற பயங்கரத்திற்கு காரணம் கிரிவலப்பாதையில் முறையான கழிவறை வசதிகள் பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் இருப்பது தான் எனவும் அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்

எனவே க்தர்களுக்கு முறையான பாதுகாப்பையும் , கழிவறை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டி அப்பகுதி மக்களும் பக்தர்களும் கோவில் நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்