சமையல் நேரத்தில் திடீரென வெடித்த சிலிண்டர்.. ஒரு பக்க வீடே இடிந்து காலி.. 4 உயிரின் நிலை..?

x

வந்தவாசி அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில், வீட்டிலிருந்த குடும்பத்தினர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். திருவண்ணாமலை மாவட்டம் சின்ன இலவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது வீட்டில் சமையலின்போது சிலிண்டர் வெடித்ததில், பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும், வீட்டின் கதவுகள் உடைந்துள்ளன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில், பெருமாளும் அவரது குடும்பத்தினர் மூவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்