தன் போல் இல்லை எனக்கூறி 8 வயது மகளை கொன்று வீசிய கொடூர தந்தை

x

தன் போல் இல்லை எனக்கூறி 8 வயது மகளை கொன்று வீசிய கொடூர தந்தை

மதுரை சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

காளிமுத்து தனது மனைவியின் மீது சந்தேக பார்வை கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்,

காளிமுத்துவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் காளிமுத்துவின் வீட்டில் போலீசார்

மேற்கொண்ட சோதனையில் , எட்டு வயது சிறுமி தன்ஷிகா கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாளிக்குள் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்த போலீசார்

அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரியதர்ஷினியிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், மகள் தன் போல் இல்லை

எனக்கூறி, தந்தையே கொலை செய்தது அம்பலமானது. இச்சம்பவம் தொடர்பாக தன்ஷிகாவின் தந்தை காளிமுத்துவை தேடிவருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்