பள்ளி மாணவியை முட்டிய மாடு...தந்தி டி.வி-யில் வெளியான செய்தி... உடனடி நடவடிக்கை எடுத்த நகராட்சி

x

பள்ளி மாணவியை முட்டிய மாடு...தந்தி டி.வி-யில் வெளியான செய்தி... உடனடி நடவடிக்கை எடுத்த நகராட்சி

வந்தவாசி யில், சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி அதிகாரிகள் பிடித்து நடவடிக்கை எடுத்தனர். சன்னதி தெரு, அச்சரப்பாக்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த

மாடுகளால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதனிடையே, சாலையில் சென்ற பள்ளி மாணவி ஒருவரை மாடு முட்டி கீழே தள்ளியது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை

ஏற்படுத்தியது. இது குறித்த செய்தி தந்தி தொலைக்காட்சியில் நேற்று ஒளிப்பரப்பான நிலையில், சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து கோசாலைக்கு அனுப்பி வைத்து நகராட்சி

ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.



Next Story

மேலும் செய்திகள்