ஒரே வீட்டில் துடிதுடித்து இறந்த தம்பதி - மதுரையில் பயங்கரம் | Madurai
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குடும்ப சூழல் காரணமாக கணவன், மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயன்மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளிகளான செல்வம் - வான்மதி தம்பதி, வீட்டில் விஷமருந்தி மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி கணவன் - மனைவி உயிரிழந்தனர். விசாரணையில் குடும்ப சூழலால் மன உளைச்சலில் இருந்த இருவரும், விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது
Next Story
