25க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்ற கல்லூரி பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

x

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கட்டுப்பாட்டை இழந்த கல்லூரி பேருந்து கவிழ்ந்ததில் 25க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயம் அடைந்தனர்.. துடுப்பதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியின் பேருந்து மேட்டூபுதூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது வளைவில் ஓட்டுநர் திருப்ப முயன்றார்.. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.. இதில் 20 பேருக்குக் காயமும், 5 பேருக்கு படுகாயமும் ஏற்பட்டது.. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் காயம் அடைந்த மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றன.. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் பால கிருஷ்ணணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்