இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (22-10-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவி
  • பாலஸ்தீனத்திற்கு மருந்து, பேரிடர் நிவாரண பொருட்கள் அடங்கிய மனிதாபிமான உதவிகள்...
  • விமானப்படை விமானம் மூலம் இந்தியா இன்று அனுப்பி வைப்பு...
  • நெதன்யாகு மீது குற்றச்சாட்டு
  • ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தான் காரணம்...
  • தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் பராக் பரபரப்பு குற்றச்சாட்டு...
  • காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம்...
  • "வெற்றி ஒன்று தான் இலக்கு"
  • நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி ஒன்று தான் இலக்காக இருக்க வேண்டும்...
  • திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவுறுத்தல்...
  • "எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல"
  • நாங்கள் எந்த மொழிக்கும், எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல...
  • இந்தி நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்...
  • பாஜகவின் ஊழல்களை திசை திருப்பவே உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சு சர்ச்சையாக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு...
  • கூட்டணி விலகல் - ஈ.பி.எஸ். விளக்கம்
  • பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியதும், சிறுபான்மையினர் குறித்த கவலை தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது...
  • கூட்டணி வேறு, கொள்கை வேறு எனவும்
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று விளக்கம்...
  • தமிழக அரசு சட்டப்போராட்டம்
  • நான்கு கட்ட கலந்தாய்வு முடிந்தும் காலியாக உள்ள 83 மருத்துவ இடங்களை வழங்க வலியுறுத்தி சட்டப்போராட்டம்...
  • தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தகவல்...
  • ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
  • கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு...
  • கோடியக்கரை அருகே தமிழக மீனவர்களிடம் மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்...
  • ஆயுத பூஜை - சந்தையில் குவிந்த மக்கள்
  • ஆயுத பூஜையை முன்னிட்டு, பூஜை பொருள் வாங்க இன்று கடைவீதிகளில் குவிந்த மக்கள்....
  • அவல், பொரி மற்றும் பழ வகைகள் அதிகளவில் விற்பனை...
  • மலர்ச் சந்தைகளில் பூக்களின் விலை உயர்வு...

Next Story

மேலும் செய்திகள்