8 வீடியோக்கள்... யூடியூப் சேனல் மீது பிரபல நடிகர் பரபரப்பு புகார்

x

அருண் விஜய் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில், தன்னை பற்றியும், தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி சினி சமூகம் என்கிற யூடியூப் சேனல் வீடியோவை பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக தங்களது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பாக 8 வீடியோக்களை வெளியிட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அருண் விஜய் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்