அதிகரிக்கும் நீர்நிலை மரணங்கள்! - அறிவுரையோடு, முதல்வர் அதிரடி உத்தரவு

அதிகரிக்கும் நீர்நிலை மரணங்கள்! - அறிவுரையோடு, முதல்வர் அதிரடி உத்தரவு
x

நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றில் 7 பேர் மூழ்கி உயிரிழந்தது வேதனை அளித்தது எனக் கூறியுள்ளார். வந்தபின் தவிப்பதை விட வருமுன் காப்பது மேல் என்பதை நாம் அறிவோம் எனக் மேற்கோள் காட்டும் முதலமைச்சர், நீர்நிலைகளில் ஏற்படும் ஆபத்துக்களை சிறுவர், சிறுமியர், இளைஞர்களுக்கு எடுத்துக்கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆழமான ஆறு, குளம் அருகே எச்சரிக்கை பலகை வைக்க வலியுறுத்தும் முதல்வர் ஸ்டாலின், வாழ வேண்டிய இளந்தளிர்கள் இழக்கப்படுவது இனியாவது தடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்