மகன், மகள், மருமகளுக்காக 55 லட்சம் - EX NLC ஊழியருக்கு ஷாக் கொடுத்த தம்பதி

x

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 55 லட்ச ரூபாய் பண மோசடி செய்த ஐஏஎஸ் அகாடமி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேந்திரக்கிள்ளையை சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மனைவி உஷா. இருவரும் வடலூரில் ஜெயம் என்ற பெயரில் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வந்த நிலையில், பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வலை விரித்து வந்துள்ளனர். இதை நம்பி குறிஞ்சிப்பாடி அருகே விழப்பள்ளத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரான அன்பழகன் என்பவர், தனது மகனுக்கு மின்சாரத்துறையில் வேலை பெற்று தர 25 லட்சமும், மகள் மற்றும் மருமகளுக்கு ஆசிரியர் பணி பெற்றுதர 30 லட்சம் என 55 லட்ச ரூபாய் பணத்தை தீனதயாளனிடம் கொடுத்திருக்கிறார். பணத்தை பெற்றுக்கொண்டு தீனதயாளன் வழங்கிய பணி நியமன ஆணை போலியானது என்பது தெரியவர, அன்பழகன் அதிர்ச்சியடைந்துள்ளார். பணத்தை திருப்பி கேட்ட போது தம்பதி தகாத வார்த்தைகள் கூறி திட்டியதால் ஆத்திரமடைந்த அவர் போலீசில் புகாரளித்த நிலையில், விசாரணையில் இருவரும் மோசடி செய்தது அம்பலமானது. தீனதயாளன் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்த நிலையில், இருவர் மீதும் வருவாய் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்