செங்கல்பட்டில் கிடைத்த 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குழந்தையின் எலும்புக்கூடு

x

சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்பில் செங்கல்பட்டு அருகே பாத்தூர் செட்டிமேடு பகுதியில், தொல்லியல் துறை தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கிறது. இதில் கிடைத்த குழந்தையின் எலும்புக்கூடு தோராயமாக 5 ஆயிரம் ஆண்டு பழமையானது எனவும், தமிழ்நாட்டில் முதல் முதலாக முழு எலும்புக்கூடு கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பகுதி கீழடியை காட்டிலும், பழமையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு, இரும்பு மற்றும் சங்க காலத்தை சேர்ந்த பாத்திரங்கள், பானை ஓடுகள், காதணிகள், இரும்பால் செய்யப்பட்ட வில்லின் முனை உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த எலும்புக்கூடுகளை டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக

தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்