4 ஆண்டுகள்... ரூ.2.50 கோடி...! அரசு பணத்தை ஆட்டைய போட்ட பெண் ஆர்.ஐ.. வெளிச்சம் போட்டு காட்டிய போலீஸ்

x

சிவகங்கை மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலகத்தில், சீனியர் ஆர்.ஐ ஆக பணிபுரிந்து வருபவர் சீதா பிரியா. இவர் ஆதி திராவிட நலத்துறைக்காக அரசு ஒதுக்கிய பணத்தை கையாடல் செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளிக்கப்பட்டது. விசாரணையில், கடந்த 2013 முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஆதி திராவிட நலத்துறைக்காக அரசு ஒதுக்கிய பணம், சுமார் 2 கோடியே 35 லட்ச ரூபாயை சீதா பிரியா மோசடி செய்திருந்தது அம்பலமானது. மேலும், மோசடி பணத்தை தனது கணவர் மற்றும் 4 பேரின் 7 வங்கி கணக்கிற்கு சீதா பரிவர்த்தனை செய்திருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், ஆர்.ஐ சீதாப்பிரியா மற்றும் அவரது கணவர் ராம்குமாரை போலீசார் கைது செய்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்