புகாரி ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 4 பேருக்கு திடீர் வாந்தி,மயக்கம்-அதிரடி ஆக்சன் எடுத்த அதிகாரிகள்
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள பிரபல உணவகத்தில், அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, அந்த உணவகத்தை 3 நாட்கள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊரப்பாக்கத்தில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில், அசைவ உணவு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சமையற்கூடம் மோசமாக இருந்ததையும், முறையாக பராமரிக்கப்படாமல் பல இடங்களில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடுகளுடன் இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இவற்றை சீரமைத்து, அனுமதி பெற்றபின் விற்பனையை தொடங்க வேண்டுமெனக் கூறி, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் உணவகத்தை திறக்க அதிகாரிகள் தடை விதித்தனர்.
Next Story
