சென்னையின் 9வது மண்டலத்துக்கு ரூ.30 லட்சம் - முதல்வர் அறிவிப்பு

x

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள் அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...

சிறப்பாக செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விருதுகள் வழங்கி கவுரவிக்க உள்ளார்.

அதன்படி, சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசுக்கு திருச்சியும், இரண்டாவது பரிசுக்கு தாம்பரமும் தேர்வாகியுள்ளன.

நகராட்சி வரிசையில், முதல் பரிசுக்கு ராமேஸ்வரமும், 2ம் பரிசுக்கு திருத்துறைப்பூண்டியும், 3ம் பரிசுக்கு மன்னாா்குடியும் தேர்வாகியுள்ளன.

அதேபோல பேரூராட்சிகளில், விக்கிரவாண்டி முதல் இடத்தையும், ஆலங்குடி இரண்டாவது இடத்தையும், வீரக்கல்புதூா் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலத்துக்கான முதல் பரிசு ஒன்பதாவது மண்டலத்துக்கும், இரண்டாவது பரிசு 5வது மண்டலத்துக்கும் கிடைத்துள்ளது.

சிறப்பாக செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது

சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு - திருச்சி(ரூ.50 லட்சம்), இரண்டாவது பரிசு - தாம்பரம்(ரூ.30 லட்சம்)

சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு - ராமேஸ்வரம்(ரூ.20 லட்சம்), 2ம் பரிசு - திருத்துறைப்பூண்டி(ரூ.10 லட்சம்), 3ம் பரிசு - மன்னாா்குடி(ரூ.6 லட்சம்)

Card 4

சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசு - விக்கிரவாண்டி(ரூ.20 லட்சம்), 2ம் பரிசு - ஆலங்குடி(ரூ.10 லட்சம்), 3வது இடம் - வீரக்கல்புதூா்(ரூ.6 லட்சம்)

Card 5

சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலத்துக்கான முதல் பரிசு -9வது மண்டலம்(ரூ.30 லட்சம்), 2வது பரிசு - 5வது மண்டலம்(ரூ.20 லட்சம்)

==


Next Story

மேலும் செய்திகள்