3 நாட்கள் தான் கெடு ... தலைவனை ரிலீஸ் செய்யாவிட்டால் - TTF-ன் ரசிகர் மிரட்டல் வீடியோ

x

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டிடிஎஃப் வாசனை, விடுதலை செய்யாவிட்டால் போராட்டம் நடத்த இருப்பதாக அவரது ரசிகர் ஒருவர் வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிரா நோக்கி ரைடு சென்ற டிடிஎஃப் வாசன், காஞ்சிபுரம் அருகே பெரும் விபத்தில் சிக்கி கை எலும்பை முறித்துக் கொண்டார். கொலையாகாத மரணம், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்றது என ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், டிடிஎஃப் வாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது டிடிஎஃப் வாசனின் ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திய நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வாசனை மூன்று நாட்களில் விடுதலை செய்யாவிட்டால் போராட்டம் நடத்த இருப்பதாக ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்