285 கிராமப்புற சாலைகள், 141 பாலங்கள்..ரூ.781 கோடி நிதி ஒதுக்கீடு

x

தமிழ்நாடு முழுவதும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கணக்கெடுப்பு பணிகள் முடிவு பெற்றதன் அடிப்படையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிர்வாகப் பொறியாளர் மூலம் முழுமையாக சரிபார்க்கப்பட்டது. மேலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் கோரிக்கையை நிறைவேற்ற 153.42 கோடி ரூபாய் செலவில் 35 பாலங்களும், 20.82 கோடி ரூபாய் செலவில் 13 சாலைகளும் அமைக்க முன்மொழியப்பட்டது. அதைத் தொடர்ந்து, நடப்பாண்டில் நபார்டு வங்கி உதவியுடன் 285 கிராம சாலைகளை மேம்படுத்தவும், 141 பாலங்களை கட்டவும் 781 கோடி ரூபாயை விடுவிக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, 781 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்