27 ஆண்டுகள் சிறை... ரூ.171.74 கோடி அபராதம்... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

x

27 ஆண்டுகள் சிறை... ரூ.171.74 கோடி அபராதம்... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


திருப்பூரை தலையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 930 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. நிறுவன

இயக்குநர்கள்,

கமலவள்ளி, மோகன்ராஜ், கதிரவன் ஆகியோரை சிபிஐ கைது செய்த நிலையில், வழக்கு விசாரணை கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2013ம்

ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி ஆயிரத்து 402 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதிக்கட்ட விசாரணையில், கதிரவன் உயிரிழந்த நிலையில், கமலவல்லி

மற்றும் மோகன்ராஜ் மட்டும் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 27 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கிய நீதிபதி, 171 கோடியே 74 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து

தீர்ப்பளித்தார். மேலும், வழக்கை முழுமையாக விசாரிக்காத சிபிஐக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அபராத தொகையை சாட்சியம் அளித்த ஆயிரத்து 402 பேருக்கு பிரித்து

கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்திரவிட்டார்


Next Story

மேலும் செய்திகள்