முதலமைச்சர் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்.. விசாரணையில் வந்த உண்மை

தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரயில்வே ஊழியரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
x
முதலமைச்சர் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  நபர்.. விசாரணையில் வந்த உண்மை

தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரயில்வே ஊழியரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக முதலமைச்சர் வீட்டில் உள்ள தனிப்பிரிவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி முதலமை‌ச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்து அவர் இணைப்பை துண்டித்ததாகத் தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி மிரட்டல் விடுத்த தென்காசி மாவட்டம் தாட்டான்பட்டியைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்ற ரயில்வே ட்ராக் மேனாகப் பணியாற்றும் நபரைக் கைது செய்தனர். இவர் தந்தை ஜெபாஸ்டியன் 2 மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது உரிய விசாரணை அளிக்காததால், விரக்தியடைந்த அந்தோணிராஜ், குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்