தமிழகம் வரும் பிரதமர் மோடி ....ஏற்பாடு பணிகள் தீவிரம்...

26ம் தேதி மாலை 5.10 மணியளவில் ஐதரபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது....
x
தமிழகம் வரும் பிரதமர் மோடி ....ஏற்பாடு பணிகள் தீவிரம்...

26ம் தேதி மாலை 5.10 மணியளவில் ஐதரபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அது முடிந்ததும், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அடையாறு செல்லும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும் நேரு ஸ்டேடியத்திற்கு செல்கிறார். இதையொட்டி மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நேரு ஸ்டேடியத்திற்கு பிரதமர் காரில் சென்றால் வாகன நெரிசல் ஏற்படும் என்பதால், வான்வழி பயணத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்