கால் கடுக்க நின்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் - வரலாற்றில் இடம் பிடித்த நிகழ்வு

சென்னை பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறையாக 931 பேருக்கும் கால் கடுக்க நின்றுகொண்டே தமிழக ஆளுநரும், முதல்வரும் பட்டங்களை வழங்கியுள்ளனர்...
x
கால் கடுக்க நின்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் - வரலாற்றில் இடம் பிடித்த நிகழ்வு....

சென்னை பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறையாக 931 பேருக்கும் கால் கடுக்க நின்றுகொண்டே தமிழக ஆளுநரும், முதல்வரும் பட்டங்களை வழங்கியுள்ளனர். வழக்கமாக பட்டமளிப்பு நிகழ்வின் போது நன்கு படித்த மாணவர்களுக்கு மட்டுமே மேடையில் ஆளுநரால் பட்டங்கள் வழங்கப்படும். ஆனால், இம்முறை ஒட்டுமொத்தமாக 931 பேருக்கும் ஒன்றேகால் மணி நேரமாக கால்கடுக்க நின்று கொண்டே தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் பட்டங்களை வழங்கினர். பல்கலைக் கழக வரலாற்றில் இது போன்ற ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறை என துணைவேந்தர் கௌரி விழா மேடையிலேயே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்