சென்னை வரும் பிரதமர் மோடி - முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்....
x
சென்னை வரும் பிரதமர் மோடி - முக்கிய  ஆலோசனை

பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த கூட்டத்தில், டிஜிபி சைலேந்திரபாபு, மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பல்வேறு திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக வரும் 28 ஆம் தேதி குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு-வும் சென்னை வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்