"எனக்கு ரஜினி போல தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும்" - கமல் சொல்லும் விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நண்பர் என விக்ரம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
x
"எனக்கு ரஜினி போல தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும்" - கமல் சொல்லும் விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நண்பர் என விக்ரம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளீயிட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், சிம்பு, பார்த்திபன், இயக்குனர் பா ரஞ்சித், நடிகை ராதிகா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், சினிமாவும் அரசியலும் ஒட்டிப் பிறந்தவை எனக் கூறினார்.

இந்தியாவின் அழகு அதன் பன்முகத் தன்மைதான் எனக் கூறிய அவர், இந்தி ஒழிக என்று சொல்வது தன் வேலை கிடையாது என்றும், ஆனால் தமிழ் வாழ்க என்று சொல்வது தன் கடமை என்றும் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் தன் நண்பர் என்றும், சினிமாவில் ரஜினிகாந்த் தன்னுடைய போட்டியாளராக இருந்துகொண்டு நண்பராகவும் இருப்பதைப் போலத்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நட்பு பேணுவதாகக் கமல்ஹாசன் பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்