தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

கடந்த ஜனவரி 12ம் தேதி தமிழ்நாடு வரவிருந்த பிரதமர் மோடியின் பயணம், கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
x
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

கடந்த ஜனவரி 12ம் தேதி தமிழ்நாடு வரவிருந்த பிரதமர் மோடியின் பயணம், கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், வரும் 26ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, 12 ஆயிரத்து 413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பெங்களூரு - சென்னை 4 வழி விரைவுச்சாலையின் மூன்றாம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இதேபோன்று சென்னையில் அமையவுள் மல்ட்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காவுக்கும்,

ஒசூர் - தருமபுரி இடையேயான இரண்டாவது மற்றும் மூன்றாவது நெடுஞ்சாலை பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

மீன்சுருட்டி - சிதம்பரம் இடையிலான புதிய சாலைப் பணிகள், மத்திய நகர்ப்புற வீட்டுவசதித்துறை, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, மற்றும் ரயில்வே துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ள பணிகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்