"கல்வியால் தான் இந்தியா நிலவின் உயரத்திற்கு சென்றது" - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

இந்தியாவிலும், தமிழகத்திலும் கல்வியால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்...
x
"கல்வியால் தான் இந்தியா நிலவின் உயரத்திற்கு சென்றது" - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

இந்தியாவிலும், தமிழகத்திலும் கல்வியால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். நாகை அடுத்துள்ள பாப்பாகோயிலில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், கல்வியினால் உலக நாடுகள் மத்தியில் இந்தியா நிலவின் உயரத்திற்கு சென்றதாக பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்