ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் தீண்டாமை - எஸ்சி/எஸ்டி ஆணையம் நோட்டீஸ்

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் தீண்டாமை - எஸ்சி/எஸ்டி ஆணையம் நோட்டீஸ்
x
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற இருந்த பிரியாணி திருவிழாவில் தீண்டாமை பாகுபாடு இருந்ததாக புகார் கூறப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு மாநில பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரியாணி திருவிழாவில் பயன்படுத்தப்பட வேண்டிய இறைச்சி தொடர்பாக, பல்வேறு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் நிலவியது. இதனிடையே மழை காரணமாக ஆம்பூர் பிரியாணி திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பிரியாணி திருவிழாவில் தீண்டாமை பாகுபாடு இருந்ததாக கூறி, விளக்கம் கேட்டு மாநில பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்