பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது...
x
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன.

பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள், இம்மாத இறுதியுடன் முடிவடைய உள்ளன. இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நாளையுடன் முடிவடைகின்றன.

இதனையடுத்து, ஜூன் 12ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்