முன்விரோதத்தால் விவசாயிக்கு அரிவாள் வெட்டு - சமூகவலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு..!

உளுந்தூர்பேட்டை அருகே தேர்தல் முன்விரோதத்தால் விவசாயியை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்விரோதத்தால் விவசாயிக்கு அரிவாள் வெட்டு - சமூகவலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு..!
x

உளுந்தூர்பேட்டை அருகே எறையூரை சேர்ந்தவர் ஜெய்சன். ஊராட்சி மன்ற உறுப்பினரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மெல்க்யூர் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், ஜெய்சனின் தந்தை வின்சென்ட் பவுல்ராஜை, ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி, உருட்டு கட்டையாலும் பலமாக தாக்கியது. பலத்த காயமடைந்த வின்சென்ட் பவுல்ராஜ்-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, மெல்க்யூர் தம்பி ஜஸ்டின் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வின்சென்ட் பவுல்ராஜை தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமி.. என்னை விட்டுருங்க என்று ஒரு பலமுறை கெஞ்சியும், அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையால் வின்சென்ட் பால்ராஜை சரமாரியாக தாக்கும் வீடியோ பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்