மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு..!! | Chennai

கோடை விடுமுறையிலும் இல்லம் தேடி கல்வித்திட்ட வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
x
கோடை விடுமுறையிலும் இல்லம் தேடி கல்வித்திட்ட வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, இல்லம் தேடி கல்விதிட்ட சிறப்பு அலுவலர் இளம் பகவத் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், வழக்கமான பாடங்கள் இல்லாமல் விளையாட்டு, கலை நிகழ்வுகள் போன்ற மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்