"ஹலோ பூஸ்டர் டோஸ் போட்டீங்களா?"; சைபர் கொள்ளையர்களின் புது டெக்னிக் - உஷார் மக்களே..!

பூஸ்டர் டோஸ் செலுத்துவதாக கூறி மோசடி நடப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
x
"ஹலோ பூஸ்டர் டோஸ் போட்டீங்களா?"; சைபர் கொள்ளையர்களின் புது டெக்னிக் - உஷார் மக்களே..!

பூஸ்டர் டோஸ் செலுத்துவதாக கூறி மோசடி நடப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சுகாதாரத்துறை சார்பில் பேசுவதாக கூறி வரும் ஆன்லைன் அழைப்பில் கட்டாயம் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதுடன், சம்பந்தப்பட்டவரின் முகவரி, செல்போன், வங்கி தகவல்களை பெற்று அவர்களுக்கு ஓடிபி அனுப்புவதாகவும், அந்த ஓடிபியை பெற்று கொண்டு வங்கியில் இருந்து பணத்தை கொள்ளையடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள், ஏற்கெனவே இரு டோஸ் செலுத்தி கொண்ட தகவல்கள் அரசிடம் இருப்பதால் சுகாதாரத்துறையினர் ஆதார், வங்கி கணக்குகளை கேட்கமாட்டார்கள் என கூறியுள்ளனர். மேலும், தொலைபேசியில் ஆதார் விவரங்களை கேட்டால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்