"திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சியா?" - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன்...
x
"திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சியா?" - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், திமுக தலைமையிலான அரசு, மதசார்பற்ற அரசு என கூறி வரும் நிலையில், பண்டிகைகள் தொடர்பாக அவர் தெரிவித்த சில கருத்துகளை அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வநாதன் தவறாக எதையும் குறிப்பிடவில்லை என்றார். இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என திட்டமிட்டு, நாடுமுழுவதும் அவதூறு பரப்பப்படுவதாக தெரிவித்தார். பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி வழியில் திராவிட மாடல் ஆட்சியை, வழங்கி வருவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தங்களது கூட்டணிக்கு மதசார்பற்ற கூட்டணி என பெயரிட்டு அதன்படி செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்